மட்டக்களப்பில் சோபையிழந்த பொங்கல் பண்டிகை வியாபாரம்..!samugammedia

பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்பதற்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தயாராகிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  தைத்திருநாளை கொண்டாடுவதற்கு அந்த மாவட்ட மக்கள்  தயாராகி வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை ஆரையம் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு நகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகளவில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை காணமுடிந்துள்ளது. 

பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் உடைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருவதாகவும் எனினும் இம்முறை பொருட்கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்களின் அளவு குறைவான நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply