யாழ்ப்பாணம் வருகிறது ஐ.எம்.எப். குழு..! பல தரப்பினருடனும் சந்திப்பு..!

 

இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டது. 

அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

 

Leave a Reply