பாட்டி வீட்டுக்குச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு…! நடந்தது என்ன?samugammedia

பேருவளை உள்ளுராட்சி சபையின் பலகல சத்திபொலவுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று (15) 20 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கடலில் நீராடச் சென்று உயிரிழந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயாகல பெலபொல்வத்த செடியார் பியகம பகுதியைச் சேர்ந்த இவர் தனது பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்துவெளியேறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply