தேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு – விவசாய அமைச்சு நடவடிக்கை..!samugammedia

இலங்கை தேயிலையை பொறுத்த வரையில் எப்போதும் அதற்கான கேள்வி உலக நாடுகளுக்கிடையே காணப்படுகிறது. அந்த வகையில் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தேயிலை உரங்களின் விலையை குறைக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவினால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இதன்படி T-750 மற்றும் T-709 உர வகைகளின் விலை 7,735 ரூபாவாகவும், T-200 உர வகைகளின் விலை 5,500 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *