நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் இட்ட பதிவில் இதனை தெரிவிதார் .
இதன்படி எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மெட்டா கூகுள் யூடியுப் போன்ற பொருளாதாரத்திற்கு அவசியமான பாரிய தளங்களுடனான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ள நாங்கள் சிறுவர் பாலியல் மற்றும் ஏனைய பாரிய இணைய குற்றங்களை தடுப்பதற்காக பாரிய தளங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.



