நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்காக பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்…!samugammedia

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.

புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயஸ்த்ரிம்சத் குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம், எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் 11.30 வரையான சுபமுகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நிகழவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 21 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெற்று, மறுநாள் 22 அன்று காலை 07.00 மணிக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும்  மறுநாள் 23ஆம் திகதி மாலை 05.00 வரை இடம்பெறவுள்ளது.

அதேவேளை, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன மஹாகும்பாபிஷேச கிரியைகளை நடாத்துவதற்காக 27 சிவாச்சாரியர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *