முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலத்தால் பரபரப்பு…! samugammedia

முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம்  இன்று(19) கரை ஒதுங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது

குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதுடன் அதில் உள்ள கான்களில்  இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. 

குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்து சென்று குறித்த சடலத்தை  மீட்கும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த  சடலமானது இராணுவத்தினரின் முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Leave a Reply