
இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு பதிவு செய்துள்ளோர், தாம் மீள பெற்றுக் கொள்ளக்கூடிய பதிவுக் கட்டணமான 25 ஆயிரம் ரூபாவை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் செலுத்தி தங்கள் யாத்திரையை உறுதி செய்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.




