கொள்ளுப்பிட்டி இளைஞர் அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கிப் உயிரிழப்பு..!! samugammedia

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சுஜீவ பிரியலால் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் நண்பர்களுடன் இன்று (29) பிற்பகல் அம்பாந்தோட்டைக் கடலில் குளித்தபோதே நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார்.

சடலம் இன்று மாலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்த இளைஞருடன் கடலில் குளித்த ஏனைய 4 இளைஞர்களும் ஆபத்து எதுவுமின்றி மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply