ராஜ் ராஜரட்ணத்தின் ‘சமனற்ற நீதி’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் பிற்பகல் 2.45 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது.
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நூல் பற்றிய அறிமுக உரையை வைத்திய கலாநிதி ம. குருபரன் நிகழ்த்தினார்.
இதன்பின்னர் நூல் வெளியீடும் சிறப்புப் பிரதி வழங்குதல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர்கள் ,சமய தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









