இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி…!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை – ஹக்மன வீதியின் யட்டியன பிரதேசத்தில் லொறி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சௌசிறி உயன – யடிவன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண கெஸ்பேவ வீதியில் ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபைக்குட்பட்ட சேவாபியசவிற்கு முன்பாக வீதியைக் கடக்க முயற்பட்ட பாதசாரி பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

கங்கொடவில – நுகேகொட பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கெபிதிகொல்லேவ – வவுனியா வீதியின் துட்டுவெவ பிரதேசத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, எலபாத்த – கொடாமுல்ல சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, உடனிரிஹல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *