ஆன்மீகத் தலைவரான ரவிசங்கர் குருஜியை இலங்கைக்கு வருமாறு கிழக்கு ஆளுநர் அழைப்பு…! samugammedia

இந்தியாவின் சிறந்த ஆன்மீகத் தலைவரும் வாழும்கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றதோடு, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் மூலம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட  இலங்கை மக்களுக்காக  உதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி வாழ்க்கையின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைப் போதிக்கும் புத்தகங்களைப் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பரிசாக வழங்கினார்.

மேலும் தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள பணிகளுக்கு  பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply