கட்டார் வாகன விபத்தில் யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு…! திருமணமாகி சில வருடங்களில் துயரம்…!samugammedia

கட்டார் நாட்டிற்கு தொழில் நிமிர்த்தம் சென்றிருந்த யாழைச் சேர்ந்த இளைஞன் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டிற்கு சென்று 26 நாட்களே ஆன நிலையில் வாகன விபத்தில் சிக்கி நவக்கிரியை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் அல்வாய் மனோகரா பகுதியில் கடந்த  மூன்று வருடங்களுக்கு முன்னர் பெண்ணொருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.
இவ் விபத்தில் நவக்கிரியை சேர்ந்த  24 வயதான டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது.
அதேவேளை குறித்த சம்பவமானது அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
   

Leave a Reply