தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் குழப்பம்…!ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுப்பு…!samugammedia

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்  திருகோணமலையில் சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான தொரு நிலையில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான புதிய தெரிவு இன்று இடம்பெறவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது அங்கு பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.

இன்றையகூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவு நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில்  ஊடகங்களுக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply