செல்லக்கதிர்காம வீதியில் பாரிய விபத்து – ஒருவர் பலி..!samugammedia

கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்தானது நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் லாறியொன்றும் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் வேனில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வானில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply