பணி பகிஷ்கரிப்பில் குதித்த சுகாதார துறையினர்…! நோயாளர்கள் அவதி…!samugammedia

மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார துறையினர் இன்று வியாழக்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததை காணமுடிந்தது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிந்த போதிலும் மருந்துகள் வழங்குவதற்கு எந்தவித ஊழியரும் இல்லாமையால் வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு,  போன்றன இயக்கமின்றி காணப்பட்டது.

அத்தோடு அவசர பிரிவு வழமைபோன்று இயங்கியது.

தொலை தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியசாலைக்கு மருத்துவ சேவை பெறுவதற்காக வருகை தந்த பல நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் சேவை பெறாது திரும்பிச் சென்றனர்.   

Leave a Reply