பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே புகையிரதம் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.




