இந்திய மத்திய அரசின் அழைப்பையேற்று புதுடில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்க
ரை சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





