வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (05) இரவு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான சமஷ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாகவும், அதற்காக தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது 100 நாள் செயல்முனைவின் பின்னர் வெளியிடப்பட்ட சமஷ்டி கோரிக்கைகள் அடங்கிய பிரகடனமும் கையளிக்கப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, அழகுராசா மதன் ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் அசேல ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.