நாடு கோரிய முறைமை மாற்றத்தை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே…! பிரசன்ன பெருமிதம்…!

நாடு கோரிய முறைமை மாற்றத்தை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த முறையை மாற்ற முடியும் என்பதை ஜனாதிபதி தற்போது நிரூபித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதுளை மாவட்டச் செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

அதேவேளை, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிடவில்லை என தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இணையவழி சட்டம் இந்த நாட்டிற்கு அத்தியாவசியமானது. சட்டவிரோத செயல்களை செய்து வெறுப்பை பரப்புபவர்கள் அதிலிருந்து தப்ப முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply