கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் நேரடி தலையீட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளின் ஆளணி விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தலையீடு மற்றும் முறையான பதிலீடுகள் எதுவும் இன்றியும் இடம்பெற்ற இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் கடந்த 01 ஆம் திகதி நேரடியாக கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதன் விளைவாகவே மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்படி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.