புத்தாண்டில் இடம்பெற்ற கோர விபத்து..! இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

 

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஹலி-ஏல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

51 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலியாலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply