புத்தாண்டு தினமான நேற்றையதினம்(14) பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலிக்குளம் பகுதியினை சேர்ந்த 27வயதுடைய இளைஞன் ஒருவர் காலில் பாரிய வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த இளைஞர் மீது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.