இரத்தினபுரி – பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது துரதிஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிகழ்வில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தனது மகனை ஊக்குவிக்க சென்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தந்தை தனது 16 வயது மகனை பாதுகாக்கவும், ஊக்குவிற்பதற்காகவும் அவருடன் இணைந்து ஓடியுள்ளார்.
இதன்போது, தந்தை திடீரென மயங்கி விழுந்து, பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.