கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து, அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தனது அணியை இறுதி ஆரம்ப சுற்றுக்கு தகுதி பெறுவதே தனது இலக்கு என்று கூறியுள்ளார்.
சாமரி அத்தபத்து தான் ஓய்வுபெறப்போகும் திகதியை தற்போது குறிப்பிடவில்லை. எனினும் வெகு விரைவில் ஓய்வு குறித்து அறிவிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக, சாமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல், 5 ஆறு ஓட்டங்கள் மற்றும் 26 நான்கு ஓட்டங்கள் உட்பட 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற 3ஆவது அதிகபட்ச ஒட்டம் இதுவென்பதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.