தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவு தினம் திருகோணமலையிலுள்ள தனியார் மண்டபமொன்றில் மண்டபத்தில் இன்று (19) இடம்பெற்றது.
திருகோணமலை ஒன்றிணைந்த சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.