ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை இன்றைய தினம் (20) மன்னார் நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகியது.
மன்னார் மாவட்ட மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது.
குறித்த நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் பாடசாலை மாணவர்கள்,இளைஞர் யுவதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையூடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழில்களை பதிவு செய்தல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவதல்.குறித்த நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வின் எண்ணக்கருவில்,இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்களின் ஒத்துழைப்போடு,இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தமானின் பங்கு பெற்றுதலுடன் இன்று சனிக்கிழமை ஆரம்பமான குறித்த நடமாடும் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை(21)மாலை வரை இடம்பெறும்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு சென்று சட்ட ரீதியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எத்தனித்துள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.