இந்திய மீனவர்களின் வருகை நீக்கம் தொடர்பான சட்ட வரைபு நீக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்திடம் செல்வோம் – மொஹமட் ஆலம் எச்சரிக்கை..!!

இந்திய மீனவர்களின் வருகை நீக்கம் தொடர்பான சட்ட வரைபு நீக்கப்படுமாக இருந்தால் சர்வதேசத்திடம் செல்ள்ளவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாருமான முகமட் ஆலம் தெரிவித்துள்ளார் 

வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின்  கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாங்கள் வலியுறுத்தி வருகின்ற ஒவ்வொரு விடயங்களும் கடல் வளங்களையும், கடல் சார் நிலங்களின் செயல்பாடுகளையும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்ப்பதும் அந்த அமைச்சுக்களும் சரி  அரசாங்கமும் சரி உண்மையில் இது நீண்டகாலமாக புரையோடிப்போன விடயமாக இருக்கின்றது. நாங்கள் இதனை வடமாகாண மீனவர் என்ற ரீதியில் முற்று முழுவதுமாக எதிர்த்து வருகின்றோம். 

எமது வளங்களும் எமது நிலங்களும் அந்த மக்களினாலேயே அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அந்த கருத்தை  தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரை வைத்து அரசாங்கம் இவ்வாறான செயல்பாட்டை முன்னெடுப்பது என்பது அவருக்கு கேட்ட பெயரை ஏற்படுத்துவதும் அவர் மீது  விரோதப்போக்கை கடைப்பிடிப்பதை ஏற்படுத்துவதாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.

அமைச்சரும் அவாறான செயல்பாட்டுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். குறிப்பாக துறைகளுக்கான அமைச்சுக்கள் இருக்கத்தக்கதாக கடல்தொழில் அமைச்சர் இந்த செயல்பாட்டினை முன்னெடுப்பது எதற்காக? உண்மையில் அந்த அமைச்சுக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? மீன்பிடி தொடர்பாக, மீன்பிடி சட்டம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்ததன் பயனாக இன்று வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, யாழ் மாவட்டங்களில் உள்ள சட்டம் தொடர்பான கருத்து பரிமாறல்களும் அந்த கருத்து பரிமாறல்களுக்கு அமைவாக மீனவர்களால்  முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திட்டங்களே நேற்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  

குறிப்பாக அந்த ஒவ்வொரு மாவட்டத்திலும்  மீனவர்கள், அந்த பிரதேசத்தை மையப்படுத்திய மீனவர்கள் தங்களின் நிலைப்பாட்டினை தெளிவாக கூறியிருக்கின்றார்கள். எந்த வகையிலும் இந்த கடல் வளத்தில் எமது மீனவர்களின் ஆதிக்கத்துக்கு அப்பால் இன்னொரு தரப்பை உள்வாங்குவதில் நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். 

அதற்கப்பால் இந்திய மீனவர்களின் வருகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தாலும் ஆனால் நாடாளுமன்றுக்கும் அமைச்சரவைக்கு சட்டத்துக்கான வர்த்தகமானி  வரும் பொழுது அது  நீக்கப்படுமா அல்லது உள்வாங்கப்பட்டிருக்குமா என்ற அச்சம் இன்றும் எம்மிடமிருக்கின்றது. அவர்களினால் முன்மொழியப்பட்ட எந்த தீர்மானத்தையும் அரசு மாற்றுமாக  இருந்தால் அல்லது அ ந்த பணிப்பாளர் குளாம் மாற்றுமாக  இருந்தால் அல்லது உரிய சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் சர்வதேச தூதுவர்களிடம் சென்று  முறையிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் கூறுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *