மீண்டும் குறைவடைந்தது தங்க விலை…! வெளியான அறிவிப்பு…!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்த நிலையில் பதிவாகிய நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை பன்மடங்கு அதிகரித்த நிலையில் பதிவாகியது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் இன்றையதினம்(26)  தங்கத்தின் விலை மீண்டும் குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில்,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,460, அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply