வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்…!

வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் சங்கத்தின் தலைவர் Dr.B.சக்திக்குமரன் தலைமையில் நடைபெற்றது. 

மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஸ்தாபகர் Dr.A.சக்திவேல் , சிறப்பு விருந்தினர்களாக தாய்ச்சங்கத்தின் செயலாளர் Dr.N.T.ஹேவாகம,  உபதலைவர் Dr.J.A.S.சாமர ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

மேலும் 2024 ம் ஆண்டுக்குரிய செயற்குழு தெரிவு இடம்பெற்றதோடு வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக Dr.M.முரளிதாஸ்,   புதிய செயலாளராக Dr. S. சுகிர்தனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply