இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று(6) ஆரம்பமானது.
குறித்த பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.