தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த சூட்கேஸில் சிக்கல்…! கட்டுநாயக்கவில் இளைஞன் கைது…!

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சூட்கேஸில் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்ட 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply