ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதவிகள் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் வழங்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
அதன் பின்னர், கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ள பின்னணியில், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நிறைவேற்று சபையின் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கடமையாற்றிய துஷ்மந்த மித்ரபாலவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், புதிய பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று (12) சட்டப்பூர்வமானது அல்ல என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தரப்பு நேற்று (12) தெரிவித்துள்ளது.