இன்றைய தினம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வினை முன்னிட்டு இன்றைய தினம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள முதல் மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவு சிலை அமைந்துள்ள இடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் உதவும் கரங்கள் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது அந்த வீதியால் சென்ற மக்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியினை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் வேலன் சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.