15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் அரச தலைவர்கள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வை முன்னிட்டு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வீதி மூடப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





