விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர்! இன்று அதிகாலை சம்பவம்

 

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (3) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை என தெரியவருகின்றது. 

அத்தோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply