ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற மாணவன் மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

அம்பலாங்கொடை ரயில் பாதையில் பேசிக்கொண்டு சென்ற பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ரயிலில் மோதுண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை   இடம்பெற்றுள்ளது.  

காயமடைந்த மாணவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதுடன், இருவரும் வெவ்வேறு  பாடசாலைகளில் கல்வி கற்பவர்களாவர்.  

குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தைச்  சேர்ந்தவர்  எனவும்,  

மாணவி அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.    

ரயில் மோதியதில் மாணவன் பலத்த காயம் அடைந்ததாகவும், 

மாணவிக்குக் கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.   

ரயிலில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் சுயநினைவின்றி இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply