பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி இரத்தினக்கற்கள் அகழ்ந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான நால்வரும் பொகவந்தலாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து இரத்தினக்கற்கள் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





