வைக்கோலுக்கு தீ வைத்த பெண் அதே தீயில் சிக்கி உயிரிழப்பு!

அம்பாறை – பண்டாரதுவ நவகிரிய கிராமத்தில் வயலில் அறுவடை செய்துவிட்டு வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் ஒருவர் அதே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகிரிய கிராமத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.பண்டார மெனிகே என்ற 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலுக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரைக் தேடி வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் குடும்ப உறவினர்கள் இது தொடர்பில் பண்டாரதுவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து பண்டாரதுவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply