காணாமல்போன சிறுவரொருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் பிரதீப் என்ற 13 வயதுடைய சிறுவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் (பிலியந்தலை பொலிஸ் நிலையம் – 071 8591665 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் – 011 2614222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




