ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீலங்கா’ யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்றையதினம்(31) காலை 11 மணியளவில் யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அலுவலகமானது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி தாவடியில் செயற்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் 11 தேர்தல் தொகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








