
சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

