பேருந்தில் கசிப்பை கடத்த முற்பட்ட நபர் கைது..!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் இருந்து பேருந்து ஒன்றில் கசிப்பினை கடத்த முற்பட்ட சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடதாசி பெட்டியில் பொதி செய்யப்பட்டு தருமபுரம்பேருந்து தரிப்பு  நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த கசிப்பினை பேருந்தில் ஏற்ற முற்பட்ட வேளையே குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கசிப்பினை தருமபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து 28 லிட்டர் கசிப்பும்,  கசிப்பு கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்ததுடன் சந்தேக நபர் மற்றும் தடயப்பொருளும் நீதிமன்ற முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply