சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த ரொனால்டோ!

பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஒரு பில்லியன் ஃபாலோவர்ஸைத் தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை பிரபல காற்பந்தாட்ட வீரர்  கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்துள்ளார்.

அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் 639 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸைகளையும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோவர்ஸைகளையும், எக்ஸில் 113 மில்லியன் பாலோவர்ஸைகளையும், யூடிப்பில் 60.5 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் தக்கவைத்துள்ளார்.

ரொனால்டோவின் இந்த சாதனை, அவரது காற்பந்து சாதனைகளுக்கு அப்பாற்பட்டது. அவரது சமூக ஊடக இருப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுடன் இணைவதற்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பயிற்சி நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் உதவுகின்றது.

90 நிமிடங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்களை பெற்ற அவரது யூடிப் சேனல், சமூக ஊடகத் தளத்தில் அவரது ஆதிக்கத்தை அண்மையில் வெளிக்காட்டியிருந்தது.

இது குறித்து எக்ஸில் ஒரு பதிவிட்டுள்ள ரொனால்டோ, சமூகதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *