பளையில் திடீர் சோதனை – முக்கிய பொருளுடன் சிக்கிய இரு இளைஞர்கள்

 

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த குறித்த இருவரையும் சோதனை செய்த போதே 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 18 மற்றும் 25 வயதுடைய கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply