சிலாவத்தையில் தீக்கிரையான கடை – தீவிர விசாரணையில் பொலிஸார்

முல்லைத்தீவு – சிலாவத்தை சந்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துள்ளது. 

இதன்போது குறித்த வீதி வழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல் வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இருப்பினும் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னலால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மின்சார சபையினர், தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply