ரூபாவின் பெறுமதி உயர்வு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (08) சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 288.96 ரூபாவாகவும், 298.03 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.57 ரூபாவாகவும், 298.68 ரூபாவாகவும் உள்ளது.

Today’s CBSL official exchange rates

Leave a Reply