காதலியின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காதலன் – யாழில் நடந்த சம்பவம்

 

காதலியுடன் ஏற்பட்ட  முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம்  – மானிப்பாய்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு  இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, 

வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும், தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்துள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து சந்தேக நபரான காதலனை கைது செய்ய மானிப்பாய்  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply