வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (25) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்றைய தினம் முறையே 289.15 ரூபாவாகவும், 298.20 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.00 ரூபாவாகவும், 298.11 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

Leave a Reply