மீண்டும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது (29) இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 289.08 ரூபாவாகவும், 298.16 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.06 ரூபாவாகவும், 298.11 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

அதேநேரம், மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.

Today’s CBSL official exchange rates

Leave a Reply